எனக்கு தெரிந்து நண்பர்கள்தான் வெங்கட்
பிரபுவின் வாழ்க்கையைதிசை மாற வைத்தார்கள்...அதுதான் நட்பு…. பெரிய ஆக்டராக
மாறியும் இன்னும் ஜெய் சின்ன வேடத்தில் பிரியாணியில் தலை காட்டி இருப்பதும், மார்க்கெட்
பெரியதாக இல்லாத விஜயலட்சுமி முதற்கொண்டு திரும்ப திரும்ப தன் திரைப்படங்களில்
வாய்ப்பு வழங்கி வருவதும் பெரிய விஷயம்..
முன்பு பாலச்சந்தர்
தனது அத்தனை படங்களிலும் பார்பார்மென்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை அவர் விட்டுக்கொடுத்ததே
இல்லை… தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்… ஆனால் வெங்கட்
படங்களில் பெர்பாமன்ஸ் என்பதே மருந்துக்கு கூட இல்லை ஆனாலும் தொடர்ந்து வாய்ப்பு
தருவது பெரிய விஷயம்…
சென்னை 28இல் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்தவர் ஆராண்ய
காண்டம் படத்தில் நடித்தார்… மடியற ஆண்டிக்கிட்ட உனக்கு கமல் புடிக்குமா?
ரஜினி புடிக்குமான்னு கேட்கனும்ன்னு சொன்ன அந்த பையன் எங்க காணாம போனாருன்னு தெரியலை…
நல்ல பர்பாமர்…
சரி அடித்தது யாருன்னு கேட்கறிங்களா-?
