ஒரே மாதிரி ஸ்டைல் மேக்கிங் திரைப்படம்தான் என்றாலும்
தனித்து இன்று வரை தெரிந்தது தெரிவது சென்னை 28 திரைப்படம்தான்… இன்றுவரை
அந்த படத்தில் நடித்த அத்தனை பேரையும் அதன் பிறகு அவர் எடுத்த சரோஜா, கோவா,
மங்காத்தா, பிரியாணி வரை ஒரு காட்சியிலாவது அவர்களை பயண்படுத்தி இருக்கின்றார்…
அவர் மட்டும் அல்ல… சென்னை
28 இல் நடித்த அத்தனை பேரும் நட்புக்கு மதிப்பு கொடுத்து இன்று வரை வெங்கட்
இயக்கும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது….
25 வருடங்களுக்கு முன் வெங்கட் பிரபு பெரிய இயக்குனர்
என்று யாராவது சொல்ல இருப்பார்களேயானால் பெற்ற அப்பாவான கங்கை அமரனே சிரித்து இருப்பார்.... காரணம் வெங்கட்
ரொம்ப வெகுளியான தோற்றம்... எதை பேசும் முன்னும் பக பக என்று சிரிக்கும் குணம் என்று
ஒரு டோட்டல் இன்னோசன்ட் உருவம்... அப்போதைய
தொலைகாட்சி பேட்டிகளில் கூட வெங்கட் பேசுவதை இப்போது பார்த்தால் அதிகம் சிரித்து தேவையில்லாமல் வழிந்து வைப்பது போல இருக்கும்.
பெரிய வீட்டு கல்யாணங்களில் இசைகச்சேரிகளில் பாடி வந்த
எஸ்பி சரண், மற்றும் வெங்கட் பிரபு வாழ்வில் சமுத்ரகனி உள்ளே நுழைந்து உன்னை சரணடைந்தேன் படம்
மூலம் சினிமா ஆசையை இன்னும் கிளரிவிட ... அது கொழுந்து விட்டு எரிந்து இன்று தமிழ்
திரையுலகில் மினிமம் கேரண்ட்டி டைரக்டர் வெங்கட் பிரபு என்று வளர்வது சாதாரணம் இல்லை....
