காபி வித்த டிடியை, புடவையை கட்டி ....பெரிய பொட்டு வச்சி… காலையில்
ஆன்மிக உலாவுல... பழனிமலை முருகனுக்கு பால்காவடி எடுப்பதால் என்ன பலாபலன்னு விடியகாத்தலே
வந்து பெரிய பொட்டோடு மூஞ்சியை காட்டிட்டு சாயங்காலம் சூப்பர் சிங்கர்
நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் டி ஷர்ட்டோட டிடிவந்து நின்னா…. மக்கள்
சுத்தமா ஏத்துக்க மாட்டாங்க…ஆதனால டிடி போன்ற காம்பயரரை மார்டன்
டிரஸ்ல ஊலாவ விட்டு நல்ல நாள் அதுவுமா கபால்ன்னு புடவைல வந்து திடிர்ன்னு நின்னா… ரிமோட்ல
சேனல் மாத்தாம நின்னு தொலைக்கும்.
விஜய் டிவி வளர்த்து விட்ட எத்தனையோ பேர் பல இடங்களில்
பயணித்தாலும்… விஜய் டிவி பிராண்ட் ஆளாக மாறியபின் அவர்களை தன் வசம்
வைத்துக்கொண்டு , சென்ட்டி மென்ட்டாக ஒரு இனிய பந்தத்தை உருவாக்கி வைத்து இருப்பதில்
விஜய் டிவியின் வியாபார தந்திரமும் அடங்கி இருப்பதை மறுக்கவில்லை…
டிடி, மாகாபா, கோபிநாத்தை வேறு டிவியில் பார்ப்பதை
பார்வையாளனால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பலகோடி ரூபாய் செலவு செய்து ஒத்த அலைவரிசை இல்லாத
காம்பயரைரை வைத்துக்கொண்டு எப்படி ஷோ பண்ண இயலும்? ஷோவும் நல்லா வராது.. ரீடேக் போக
போக.. புரொடெக்ஷன் காஸ்ட்…. தற்போதைய பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருக்கும்…அதை சரியா உணர்ந்துக்கிட்ட விஜய் டிவி.. கூடுமானவரை தங்கள் டிவியை விட்டு
தாங்கள் வளர்த்த ஆட்களை பிய்த்து கொண்டு செல்வதை கூடுமானவரை தவிர்க்க பார்கின்றது என்பதுதான்
நிதர்சன உண்மை…
