விஜய் டிவியிடம் இரண்டு விஷயங்கள்… முக்கியமானவை
தொலைகாட்சிக்கு முகம் ரொம்ப முக்கியமான விஷயம்… அது
ஒரு மயக்கும் விஷயம்.. அழகான முகம் கொண்ட , அதே வேளையில் நன்கு அறிமுகமான
முகமாக இருந்தாலும் ...அவர்களை வைத்துக்கொண்டு எல்லா ஷோவையும் பண்ணி விடமுடியாது…அதுக்காக அழகுதான் தொலைகாட்சிக்கு முக்கியம் என்று ஒரே அடியாக சொல்லிவிடவும்
முடியாது…
அப்படி அழகுதான் முக்கியம் என்றால்...? மார்கெட்
போனதும் தாம்பரத்தில் நின்று அடுத்து பீச் ரயில் பிடித்து படிக்கட்டில்
தொற்றி செல்வது போல…. தொலைகாட்சி உலகம் வந்த பல முன்னாள் நடிகைககள் சாதித்து இருக்க
வேண்டுமே?
சிம்ரன் ஏன் தொற்றுப்போனார்…சிம்ரன் இடுப்பை
விட தொலைகாட்சி பார்வையாளர்கள்… த கேர்ள் நெக்ஸ் டோர்
டைப்பில் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்….
உதாரணத்துக்கு விஜய் டிவி திவ்யதர்ஷினி போல….‘
குடும்பபாங்கான தோற்றம் ரொம்ப முக்கியம் … உதாரணத்துக்கு
பெப்சி உமா திருமணம் ஆகி உடம்பு பெருத்தும் கூட, அவருக்காக
ரசிகர்கள் கூட்டம் போனிலேயே பெப்சி போல பொங்கி அடங்கியதை தமிழ்நாடே
அறியும்…
ஒரு முகத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க பாடாத பாடு படவேண்டும்..
அப்படி பதியவைத்த முகத்தை எளிதில் மாற்றினால் டீஆர்பி படுத்துக்கொள்ளும்… குஷ்பு ஜாக்கெட்டு
போல சிம்ரன் போட்டு வந்தாலும் குஷ்பு இடத்தை நிரப்ப முடிவதில்லை என்பதுதான்
உண்மை…
ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு முகத்தை பதியவைத்த பின்
காசுதான் கொடுக்கிறோமே என்று டாப்டென், வந்ததும் வருவதும், திரைவிமர்சனம், திரைக்ககொண்டாட்டம்
என்று ரீட்டெய்டு டயர் போல போட்டு அடி அடி என்று காம்பயரரை படுத்தி எடுக்க கூடாது…
